இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் துடுப்பெடுத்தாடிவரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான இப்ராஹிம் சத்ரான் அரைசதத்தை கடந்துள்ளார்.
6 பவுண்ரிகள் அடங்களாக 39 பந்துகளை எதிர்கொண்ட இப்ராஹம் சத்ரான், தனது 5ஆவது அரைசதத்தை பதிவுசெய்துள்ளார்.
தம்புள்ளை-ரன்கிரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
தற்போதுவரை ஆப்கானிஸ்தான் அணி, 13.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு ஓட்டங்களை பெற்றுள்ளது.



















