கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில், வைத்தியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவையில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், சுகாதார அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக எழுத்துமூலமான உறுதிமொழியின் பேரில் அவர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தனர்.
அதன்படி இன்று சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடனான கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.