இந்தியாவில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் இந்த தருணத்தில் ஒருவரையொருவர் இகழ்ந்தும் , புகழ்ந்தும் பேசுவது வழக்கமாகிவிட்டது.
லியோ திரைப்படம் வெளியாகியிருந்த போது மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசியிருந்த கருத்தினால் அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்க வைத்தது. அந்த பிரச்சினை முடிவுக்கு வர தற்போது அவரே த்ரிஷாவுக்கு ஆதரவாக பதிவுகளை இடும் வகையில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம் என்றும் அதற்கு 25 இலட்சம் ரூபாவை த்ரிஷா பெற்தாகவும் பேட்டி ஒன்றில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜு வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியுள்ள இந்த விடயம் பற்றி பலர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒருபக்கம் த்ரிஷா மட்டுமல்ல சினிமாவில் நடிக்கும் எல்லா நடிகைகளும் அப்படித்தான் என கருத்து சொல்லி பதிவிட்டு கொண்டிருக்க , மற்றொரு பக்கம் சினிமாவில் நடிப்பவர்களை பற்றி இவ்வாறு கருத்து சொல்வது கீழ்தரமான ஒரு விடயம் எனவும், சினிமாவில் நடித்தாலும் அவர்களும் பெண்கள் தானே எனவும் கருத்து சொல்லிக்கொண்டிருக்கின்னர்.
இந்த விடயம் குறித்து ஆரம்பத்தில் அமைதி காத்து வந்த த்ரிஷா பின்னர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றை இட்டார். அதில் , கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்திருந்தார்.
மேலும், பெப்சி தலைவர், மன்சூர் அலிகான் , நடிகை கஸ்தூரி , மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாஸர் என தனது கண்டனங்களையும், ஆதரவையும் வெளியிட்டு வருகின்றனர்.
எது எவ்வாறு இருப்பினும் , சினிமாவில் நடிகைகள் என்றாலே வளைந்து கொடுத்து செல்வது வழக்கம் என்ற எண்ணமும் , அவர்களை பற்றி என்ன பேசினாலும் அது வெறும் பேச்சாக மட்டும் சென்றுவிடும் என்ற எண்ணமும் இன்னும் உலாவி திரிகின்றது. இது மாறும் வரை சாதாரண பெண்களையும் இழிவு படுத்த கண் இமைக்கும் நேரம் போதுமென்பது உறுதியாகிவிட்டது.