கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு மாதகாலமாக இந்நிலை நிலவுவதால் விபத்துக்குள்ளான நோயாளர்களையும் அவசர பரிசோதனைகளுக்காக ராகம மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி தினமும் குறைந்தது 10-15 அவசர நோயாளிகள் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டியுள்ளதுடன், தற்போது அந்த நோயாளிகள் வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி சீர்செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.