தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட6 சென் கிளயார் தோட்ட பிரிவில் தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின் பங்களாவுக்கு ஏற்றிச் சென்ற தோட்ட வாகனத்தை மறித்துள்ள தொழிலாளர்கள் ஏற்றி சென்ற கழிவு தூளையும் கொண்டு செல்ல விடாது தடுத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படும் இந்த சம்பவத்தில் உதவி தோட்ட அதிகாரி முறைக்கேடாக இந்த கழிவு தேயிலையை பொதி செய்து கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது.
இருந்தபோதிலும் உதவி தோட்ட அதிகாரி பங்களாவில் உள்ள காணியில் தனிப்பட்ட ரீதியில் “கொம்பஸ்ட்” உர சேமிப்புக்கு இந்த கழிவு தேயிலையை கொண்டு செல்வதாக தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்வாறு கழிவு தேயிலையை தோட்ட அதிகாரி கொண்டு சென்றதை தொழிலாளர்கள் ஆட்சேபித்துள்ளனர். இன்று கழிவு தேயிலையை கொண்டு சென்றுவிட்டு நாளை நல்ல தேயிலை தூளை கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், ஏற்றிச்செல்லும் கழிவு தேயிலை தூளை மீண்டும் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தொழிலாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.