காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இந்த விடயம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
“மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காஸாவில் சிறுவர் நிதியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினை பல்வேறு தரப்பினர் விமர்சிக்கக்கூடும்.
பிறிதொரு நாட்டிற்கு பொருளாதார ரீதியாக நிதியுதவி அளிக்கும் வகையில் எமது நாடு அபிவிருத்தி அடைந்துள்ளதா என்ற கேள்விகள் முன்வைக்கப்படும்.
அவ்வாறு கேள்வி எழுப்புவது தவறு. ஏனென்றால் நாம் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த போது பல நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.
அதேபோல் எம்மைவிட நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவி செய்வது எமது பண்பாடாகும்.
எமது நாட்டின் கலாசாரமும் அதுவே.
அதனடிப்படையிலேயே காஸாவிலுள்ள சிறுவர்களுக்கு உதவிபுரிய ஜனாதிபதி நடவடிக்கை நாம் வரவேற்கின்றோம்” என ஆசு மாரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.