பொலிஸ் மா அதிபராக பதவியேற்றுள்ள தேசபந்து தென்னகோன் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார்.
அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விசாரணை ஒன்றிற்காகவே உயர் நீதிமன்றத்தில் அவர் முன்நிலையிகியிருந்தார்.
பொலிஸ்மா அதிபர் வருகையையொட்டி உயர் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் உத்தியோகபூர்வ ஆவணம் ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் தனிநபர் ஒருவரை கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பிலேயே புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அத்துடன் எதிர்காலத்தில் ஒருவரை கைது செய்யும் போது அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் முறைப்பாடு செய்தவரின் விபரங்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.
தேஷ்பந்து தென்னகோன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அறிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.
இதன்படி, சம்பந்தப்பட்ட அறிக்கையின் நகலை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், மனுவை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளது.