தெற்கு அதிவேக வீதியில் குருந்துகஹ – ஹெதெக்ம பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்
தொடங்கொடவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் அதிவேக வீதியின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தையடுத்து லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.