கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் போன்ற நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சந்தித்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் உரிய அனுமதிகள் இன்றி உருவாக்கப்பட்டுள்ள தொழில்ச்சங்கங்களை உடனடியாக நீக்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகணத்தின் கல்வி வளர்ச்சியில் அரசியல் தலையீடுகள், மற்றும் அதிபர் நியமனங்களில் இடம்பெற்ற பாரபட்ச நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.