புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன், தனது கடமைகளை பொலிஸ் தலைமையகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி, அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் 03 மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.















