”கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக” தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடந்த ஆண்டு, 694 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர்.
இதன்படி, 611 ஆண்கள் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இது 88 % வீதமாகும். மேலும், இந்த காலப்பகுதியில், 81 பெண்கள் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, சமூகத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 4,100 என மதிப்பிடப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.