உள்நாட்டு யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கி நிற்வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை அமைந்துள்ள சீனக்குடா விமானப்படை தளத்தில் இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் கெடட் அதிகாரிகளுக்கு அதிகாரவாளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில் ” செங்கடலில் எமது பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும்.
யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு என்ற ரீதியில் நாம் ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லை நாம் முன்னேற வேண்டுமானால், நாட்டில் ஒரு பெரிய நவீனமயமாக்கல் செயற்பாடு இருக்க வேண்டும், நமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை நாம் பாதுகாக்க வேண்டும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டால்,
அது நம் நாட்டிற்கு ஆபத்து.
நாம் அனைவரும் உலகில் தனித்தனியாக வாழமுடியாது. இலங்கை போன்ற நாடு போர் செய்து அனுபவம் பெற்ற
நாடு ஒதுங்கி நிற்கக் கூடாது. அப்படிச் செய்தால் நம் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டோம் என்றே அர்த்தமாகிவிடும். நாட்டின் அனைத்து தருணங்களிலும் நாட்டின் சட்டத்தை பாதுகாப்பதன் மூலம்
அரசியலமைப்பின் பிரகாரம் ஸ்திரத்தன்மையைப் தக்க வைத்துகொள்வதற்காக நீங்கள் உங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
அப்போதுதான் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். மேலும் எமது நாட்டை எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமன்றி, இன்றைய சர்வதேச அரசியல் சூழலுக்கு ஏற்ப
பிராந்திய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.