சிறு போக பயிர்ச்செய்கைக்காக மகாவலி பிரதேசத்திற்கான நீர்த் திறப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதம் வரை நீர் திறந்து விடப்படும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சிறு போகத்திற்குத் தேவையான நீர், போதியளவு காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் கீழ் 258 நீர்த்தேக்கங்கள் உள்ளன.
அந்த நீர்த்தேக்கங்களில் 90 சதவீதத்தை விட அதிக நீர் உள்ளதாக மகாவலி அதிகாரசபையின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் விமல் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.