எரிபொருள் விலைகள் இன்று (திங்கட்கிழமை) திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறவுள்ளது
அத்துடன் கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டிருந்ததுடன் ஒக்டேன் 92 பெற்றோல், ஒக்டேன் 95 பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.