சாந்தனின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
வவுனியாவில் இன்று (03) காலை 08 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் பூதவுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சியில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு தற்போது யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு கொண்டுசெல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
தொடர்ந்து இன்று மாலை மாலை அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படும் பூதவுடல் நாளை (04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28 ஆம் திகதி சுகவீனம் காரணமாக உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைகள் மற்றும் விமான நிலைய நடைமுறைகளையடுத்து நேற்றையதினம் (02) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.