மாலைத்தீவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நேற்றைய தினம் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கஸ்ஸான் மஃமூனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது மாலைத்தீவின் தேசிய பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான பயிற்சி உதவிகளுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு மொஹமட் கஸ்ஸான் நன்றி தெரிவித்தார்.
அத்துடன் மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்திய அமைச்சர் கஸ்ஸான், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்குமிடையில் மேடற்கொள்ளப்பட்டுவரும் கூட்டு முயற்சியின் முக்கியதுவத்தை இதன்போது எடுத்துரைத்தார்.