ரஷ்யாவின் இராணுவ ரோந்துக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக அதனை மூழ்கடித்துள்ளதாக உக்ரேன் அறிவித்துள்ளது.
1300 தொன் எடை கொண்ட செர்கய் கோட்டோவ் என்ற ரோந்துக் கப்பல் மீதே கருங்கடலில் வைத்துக் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கருங்கடலில் ரஷ்யாவின் கடற்படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அதன் பலம் மூன்றில் ஒருபங்காக குறைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.