ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கையில் சவாலான காலங்களை ஊடகவியலாளர்கள் மற்றும் கேலிச்சித்திரக் கலைஞர்கள் எவ்வாறு நோக்கினார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவினால் தொகுக்கப்பட்ட ‘Press Vs. Prez‘ என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.
கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 9 ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக 2021 ஜூன் 23 ஆம் திகதி பதவியேற்றதிலிருந்து, மே 2023 வரையிலான அவரது பயணம் குறித்து, நாளிதழ்களில் வெளியான 618 கேலிச்சித்திரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன ஜனாதிபதிக்கு வழங்கிவைத்தார். 40 கேலிச்சித்திர கலைஞர்கள் மற்றும் 20 ஊடகவியலாளர்கள் இந்த படைப்புக்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.
அவற்றை தொலைக்காட்சியின் ஊடாக வெளியிட்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் இந்திய புகழ்பெற்ற கேலிச்சித்திர கலைஞரான நள பொன்னப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.