வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் அங்கிருந்து செல்லுமாறு கூறியதால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
வெடுக்குநாறிமலையில் இன்று சிவராத்திரி தின வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு பொலிஸாரினால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொதுமக்களுக்கு குடிதண்ணீரை கொண்டு சென்ற நீர்தாங்கி பொலிஸாரால் இடைவழியில் நிறுத்தப்பட்டதால் 5கிலோமீற்றர்கள் நடந்துசென்ற பொதுமக்கள் நீர் இன்றி அசௌகரியத்தை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலய வளாகத்தில் ஐஸ் கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை பொலிஸார் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து ஆலயவளாகத்தை விட்டு அகற்றியதால், அங்கிருந்த பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.