மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை செம்மண்ணோடை பகுதியில் 86,000 ரூபாய் பெறுமதியான போதை பொருட்களுடன் 23 வயதான யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த யுவதியிடம் இருந்து 54 கிராம் ஐஸ் போதைப்பொருள், 24 கிராம் கேரள கஞ்சா மற்றும் 30 மில்லிகிராம் நிறையுடைய ஆயிரத்து 950 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.