லைக்கா ஞானம் அறக்கட்டளையானது சர்வதேச பெண்கள் தினத்தில் இலங்கையில் 25 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, லைக்கா குழுமத்தின் தலைவரும் ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தொலைநோக்குப் பார்வையிலான வழிகாட்டலில், பல்வேறு தரப்பைச் சார்ந்த பெண்களை மதிப்பளிப்பதிலும் ஊக்குவிப்பதிலும், இலங்கையில் 25 மாவட்டங்களிலும் அர்ப்பணிப்புடன் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளதாக லைக்கா ஞானம் அறக்கட்டளை பெருமையுடன் அறியத்தருகிறது.
ஒற்றுமையையும் ஊக்கமளிப்பையும் வெளிப்படுத்துவதற்காக, அரசாங்க உத்தியோகத்தர்கள், காவற்துறையில் பணிபுரிபவர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள், யுவதிகள், பெண்தலைமைத்துவக் குடும்பப் பெண்கள், மற்றும் அனைத்துத் தரப்புப் பெண்கள் என பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பெண்கள், அறக்கட்டளையின் நிகழ்வுகளில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் தமது கதைகளை, திறமைகளை மற்றும் வேணவாக்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தளங்களாக அமையவல்லதான நிகழ்ச்சிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளையானது இலங்கை முழுவதும் ஒழுங்கு செய்தது. அனைவரையும் உள்ளடக்குதல், பாலினச் சமத்துவம், பெண்களை ஒருவரையொருவர் இணைந்து ஒருவருக்கொருவர் உதவியாகவிருக்கும் சந்தர்ப்பத்தை வழங்கல் போன்றவற்றில் அறக்கட்டளை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வுகள் அமைந்தன.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, லைக்கா ஞானம் அறக்கட்டளையானது உள்ளூரிலுள்ள பெண் தலைவர்களை அவர்களின் சிறந்த பங்களிப்புகள் மற்றும் சேவைகளுக்காக கௌரவிக்கும் முயற்சியை எடுத்தது. அவர்களின் அர்ப்பணிப்பும் தலைமைத்துவமும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிப்பதோடு எமது அறக்கட்டளை அடைய விரும்புவதான பெண்களுக்கு ஊக்கமளித்தல் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றது.
மேலும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிடத்தக்க ஒரு படியாக, லைக்கா ஞானம் அறக்கட்டளையானது பல பெண்களை அவர்களின் சமூக மையங்களின் முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளது. இந்தப் பெண்கள் குழுத் தலைவிகளாக, மைய ஒருங்கிணைப்பாளர்களாக மற்றும் மக்களுடன் பணியாற்றும் அதிகாரிகளாக, மையங்களின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முக்கியமான அதிகாரிகளாக, பதவி வகிப்பது என்பது பெண்கள் தலைமைத்துவத்தையும் பிரதிநிதித்துவத்தையும் மேம்படுத்துவதில் அறக்கட்டளையின் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றது.
“இலங்கை முழுவதும் உள்ள பெண்களை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பேச்சாளர் தெரிவித்தார். “எங்கள் நிகழ்வுகள் மற்றும் முன்னெடுப்புகள் மூலம், பெண்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் செழித்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். உள்ளூர் சமூக பெண் தலைவிகளின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதோடு, மேலும் இந்த சிறப்பான நாளில் அவர்களை ஆதரித்து மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகிறோம்”.
லைக்கா ஞானம் அறக்கட்டளையானது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் பெண்கள் சிறந்து விளங்கக்கூடிய மற்றும் அவர்களின் சமூகங்களுக்கு பங்களிக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கும் அதன் நோக்கத்தில் உறுதியாக உள்ளது.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவி வழங்குவதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும்.
லைக்கா ஞானம் அறக்கடளை குறித்தும் அதன் முன்னெடுப்புகள் குறித்தும் மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள www.lycagf.org என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.