இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் மின்சக்தி மற்றும் நிதி அமைச்சுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் பங்குபற்றலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
மின்சாரக் கட்டணக் குறைப்பு, அரசாங்கத்திற்கு சொந்தமான மின்சார விநியோக நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலைகள் தொடர்பாக இதன்போது விசேடமாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரம் மற்றும் அதன் செயல்பாடுகள் ஆகியவை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.