கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளமைக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.