இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆக்கிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் நிறைவடையும் வரை அவர் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆக்கிப் ஜாவேத் , பாகிஸ்தான் அணிக்காக 163 ஒருநாள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் , பாகிஸ்தான் அணி 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் கிண்ணத்தை கைப்பற்ற ஆக்கிப் ஜாவேத் முக்கிய பங்கு வகித்தார்.
தொடர்ந்து பாகிஸ்தான் தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய அணியின் பயிற்சியாளராகவும் ஆக்கிப் ஜாவேத் கடமையாற்றியுள்ளார்.
இவரது தலைமைத்துவத்தின் கீழ் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட இளையோருக்கான உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.