நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீர் பயன்பாடு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனுஜா களுஆராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் ஹட்டன், கம்பலவத்தை, ஊருபொக்க, புஸ்ஸல்லாவ மற்றும் கொட்டகலை ஆகிய ஆறு நீர் விநியோக கட்டமைப்புகளில் இருந்து தற்போது மக்களின் தேவைக்காக நீர் திறந்து விடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கேகாலை மற்றும் குருணாகல் பகுதிகளில் மூவாயிரம் குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்குவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.