இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, மக்களவை தேர்தலை 07 கட்டங்களாக நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த நாளில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது.
மேலும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 07ஆம் திகதி
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் திகதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ளது
தொடர்ந்து ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20ஆம் திகதி 49 தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கிறது.
ஆறாம் கட்ட தேர்தல் மே 25ம் திகதி நாடு முழுவதும் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ளது
இறுதியாக ஏழாம் கட்ட தேர்தல் வாக்கு பதிவு ஜூன் முதலாம் திகதி 57 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது
ஏழு கட்டங்களாக பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணிகள் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.