கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகத்தினர் இணைந்து இன்று போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
இன்று காலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் கல்முனை தலைமையக பொலிஸார் பாதுகாப்பினை வழங்கியுள்ளனர். கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளால் கைவிடப்பட்டிருந்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் இனவாதமாக செயற்படுவதாகவும், இந்த வருடம் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.