மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான ஜனாதிபதியினால் 16, 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தொலைதூர மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த உணவு திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 16 ஆயிரத்து 600 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளார். 17 லட்சம் தொடக்க நிலை மாணவர்களுக்கும் காலையில் சத்தான உணவு வழங்குவது சாத்தியமாகியுள்ளது. கடந்த மாதம் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மேலும் சீருடைகள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன. இன்று தொடக்கம் சத்தான உணவு வழங்கப்படும்” இவ்வாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.