”மைத்திரிபால சிறிசேனவிற்கு எதையும் மறைக்கக்கூடிய தேவை கிடையாது” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
பொதுச்செயலாளர் துஸ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற உண்மை தனக்குத் தெரியும்” என முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசே தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே துஸ்மந்த மித்ரபால இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் மைத்திரிபால சிறிசே இது குறித்து பேசியிருந்தார். அவர் உண்மைகளை வெளிப்படுத்தியதன் பின்னர் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். மைத்திரிபால சிறிசேனவிற்கு எதையும் மறைக்கக்கூடிய தேவை கிடையாது. அவருக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் அவர் சிஐடியிடம் தெரிவிப்பார். அனைவருடைய எதிர்பார்ப்புக்கும் அமைய அவர் இன்று உண்மைகளை வெளிப்படுத்துவார்.
இந்த விடயத்தில் அதிகமாக சேறு பூசப்பட்டது என்றால் அது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டும் தான். எனவே நாட்டு மக்களுக்கு உண்மையின் யதார்த்த நிலை வெளிப்படும்” இவ்வாறு துஸ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.