”ராஜபகஷர்கள் மேலுள்ள கோபத்தினை வெளிப்படுத்து விதமாகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்” என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற உண்மை தனக்குத் தெரியும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்தானது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ரோஹண பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”உயிர்த்ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்தேறி பல வருடங்கள் கடந்து விட்டன. இதன்போது ஏற்பட்ட வடுக்களை மக்கள் மறக்க முயற்சிக்கும் வேளையில் புதிய கதை உருவாக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் பிரதான சூத்திரதாரிகள் யாரென மக்கள் தெரிந்துக்கொள்ளும் உரிமை கூட தற்போது இல்லாமல் போயுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கண்டிக்குச் சென்று மொட்டுவை விமர்ச்சித்துவிட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யாரென, தனக்கு தெரியும் என மிகவும் கம்பீரமாக தெரிவித்திருக்கிறார். தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க தயார் எனில் இது குறித்த உண்மைகளை நீதிமன்றுக்கு அறியப்படுத்த தான் தயார் எனத் தெரிவித்திருக்கிறார்.
இதனை அவர் மிகவும் கம்பீரமாகவும், ராஜபகஷர்கள் மேல் உள்ள கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை நினைவு படுத்தி மீண்டும் தூண்டுவதற்காக அவர் இவ்வாறு தெரிவித்தாரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே கண்துடைப்பிற்காக இதனை விசாரிக்காமல், அவர் கூறிய இந்த விடயம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்த வேண்டும் என சிஐடி யிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே சிஐடி மற்றும் நீதிமன்றங்கள் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காப்பற்றுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும் என நான் கருதுகின்றேன்” இவ்வாறு ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.