யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் றுகுணுப் பல்கலைக்கழகமும் “சகோதரர்களின் சமர்” என்ற அங்குரார்ப்பண துடுப்பாட்டதில் இணைந்து ஒரு முக்கியமான பயணத்தைத் ஆரம்பிக்க உள்ளன.
எதிர்வரும் மார்ச் 29 மற்றும் 30, இல் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வானது பூரிப்பான துடுப்பாட்டத்திற்கு உறுதியளிப்பது மட்டுமன்றி, பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்க விழுமியங்களை ஏற்படுத்துவதுமாகவுமுள்ளது.
இரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடையேயும் தோழமையையும் நட்புறவையும் வளர்க்கும் மேன்மையான இலட்சிய நோக்கானது இந்தத் துடுப்பாட்டத்தின் மையமாகவுள்ளது. முன்மாதிரியான விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துவதன் மூலம் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதையின் சாரத்தைக் கோடிட்டுக் காட்டும் நட்புப் போட்டிகளில் வீரர்கள் இயல்பாக அணிகளில் பங்கெடுத்துக்கொள்வர். பாரம்பரிய 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட போட்டிகள், உற்சாகமான 20 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட போட்டிகள், பெண்கள் துடுப்பாட்டம், பல்கலைக்கழக ஊழியர்களுக்கென சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகள் என பல்வேறு வகையான போட்டிகளை உள்ளடக்கிய இந்தச் சுற்றுப்போட்டி துடுப்பாட்ட ஆர்வலர்களுக்கு மகிழ்வளிப்பதை உறுதிசெய்வதாக அமைகின்றது.
ஏராளமான பார்வையாளர்கள் இந்தப் போட்டியைக் கண்டுகளிக்கக் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பானது, இந்த வரலாற்று நிகழ்வின் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றது. துடுப்பாட்டம் மீதுள்ள ஈடுபாட்டாலும் சமூக உணர்வாலும் ஒன்றிணைந்து, மாணவர்கள், பொதுமக்கள், அரச ஊழியர்கள், சேவைப் பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த இரண்டு நாள் கொண்டாட்டத்தில் பங்கெடுப்பர்.
வயது வேறுபாடின்றி சமூகப் பிரிவுகளை இணைப்பதில் விளையாட்டின் ஆழமான முதன்மைத்துவத்தை லைக்கா குழுமத்தின் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் ஊடாக வலியுறுத்தியுறுத்தப்பட்டுள்ளது.
“சகோதரர்களின் சமர்” போன்ற துடுப்பாட்ட அனுபவ நிகழ்வுகளால் அனைவரையும் உள்ளடக்கிய நெறிமுறைகளை முன்னிறுத்தி, விளையாட்டுகளில் பங்குபற்றுவதில் உள்ள வயதுத் தடைகளை நீக்குவதற்கு லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக வெளிப்படையாக அவர் ஆதரவளிக்கிறார்.
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவி திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் ஞானம் அறக்கட்டளை, அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அவர்களின் பெயரால், 2010 ஆனி மாதம் ஞானம் அறக்கட்டளை நிறுவப்பட்டது.
சமூகப் பொறுப்பு மற்றும் கொடையளிப்பதில் உறுதியான அர்ப்பணிப்பை உள்ளடக்கி, உலகளவில் விளிம்புநிலையிலுள்ள சமூகங்களுக்கு உதவி வழங்குவது ஞானம் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும். தனது முன்முயற்சிகள் மூலம் பின்தங்கிய மக்களை மேம்படுத்தவும், உலக அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் ஞானம் அறக்கட்டளையானது பங்காற்றுகிறது.
துடுப்பாட்ட ஆடுகளத்தின் எல்லைகளுக்கு கடந்து, இந்த நிகழ்வானது ஒற்றுமை, நட்பு மற்றும் விளையாட்டுகளின் உலகளாவிய ஈர்ப்பு ஆகியவற்றின் மகிழ்வை குறித்து நிற்கின்றது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூடுகையில் இணையுமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதோடு தொடர்புகளை வளர்ப்பதிலும் தடைகளைத் தாண்டிச் செல்வதிலும் விளையாட்டுகளின் நிலைமாற்று ஆற்றலைக் காணுமாறும் லைக்கா ஞானம் அறக்கட்டளை அழைக்கிறது.
லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் அதன் முன்னெடுப்புகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, எங்கள் சமூக ஊடகத் தளங்களைப் பின்தொடரவும்.