கிளிநொச்சி மாவட்டத்தில் வெண் ஈ இன் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளார்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெண் ஈ இன் தாக்கம் காரணமாக பலரது தென்னை தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மரங்களில் சிறு குறும்பைகூட இல்லாத நிலையில் நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது.
தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காயின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயை விட நான்கில் ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்படுவதாக தென்னை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் காலங்களில் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 முதல் 300 ரூபாய்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் எனவும் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.