அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதன் முறையாக உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அதன்படி, புளூம்பெர்க் கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் ட்ரம்ப் இடம் பிடித்துள்ளார்.
பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் பெரும் தொழில் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் சொத்து மதிப்பு, 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். (இலங்கை மதிப்பில் – 1,962,556,050,000)
அவரது நிறுவனங்களின் பங்கு 185 சதவீதம் விலை அதிகரித்ததால் அவரது சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 500 ஆவது இடத்தில் இடம் பிடித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.