ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் வாக்குறுதி என்றும் இது நிறைவேற்றப்படும். அதுடன் அந்த ஜனநாயகம் மக்களுக்கான இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த சட்டமானது பொது ஒழுங்கை பராமரிப்பதற்காகவும், சந்தேகப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தவும் சந்தேக நபர்களை கைது செய்யவும், தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் ஆயுதப் படை வீரர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.