அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை உள்ள பாலத்தில் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இருவரின் சடலங்களை நிவாரணக் குழுவினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் ஆற்றில் மேலும் 4 உடல்கள் இருப்பதாகவும், அவற்றை அகற்றுவது கடினமான பணி என்றும் நிவாரணக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
எனவே காணாமல் போன ஏனையவர்களின் சடலங்களை கண்டறிவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் பாலத்தில் மோதியவுடன் ஆற்றில் விழுந்து, அப்போது பாலத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
அவர்களில் 2 பேரை மீட்டு நிவாரணப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காணாமல் போன ஆறு பேரில் நால்வரின் அடையாளங்களை மேரிலாந்து மாநில அதிகாரிகள் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.