ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக 33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.