உலகளாவிய ரீதியில் வாழும் கிறிஸ்த மக்கள் இன்று பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையைப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணத்தினை அனைத்து கிறித்தவ மக்களும் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று அழைத்து நினைவுகூருகின்றனர். புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என இந்த நாளை கிறித்தவ மக்கள் அழைக்கின்றனர்.
இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இன்றில் இருந்து மூன்றாம் நாள் இயேஜசு உயிர்த்தெழுந்த நாளினை உயிர்த்த ஞாயிறு என்றும் கிறித்தவ மக்கள் அழைத்து அதனை கொண்டாடுகின்றனர்.
இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இன்றைய நாளில் உலகலாளி ரீதயில் உள்ள தேவாலையங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் எமது நாட்டிலுள்ள தேவாலையங்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் இன்றைய வெள்ளிக்கிழமையை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று அழைக்கின்றோம்.
இந்த கேள்வி அணைவருக்கும் ஏற்படுகின்ற பொதுவான கேள்வியாகும்.
இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கிய நாள்.
இந்த நாள் அடிமைத்தன யுகத்தை முறித்த நாள்.
இந்த நாள் மனித வாழ்வில் சாபமாக வந்த பாவத்தைக் கழுவி
ஆசிர்வாதத்தை உண்டாக்கிய நாள்.
இந்த நாள் மனிதனை சிந்தனை செய்ய வைத்த நாள்.
இந்த நாள் துக்கத்திற்கான நாள் அல்ல
மாறாக இந்த நாள் சந்தோசத்திற்கான நாளும் அல்ல.
இந்த நாள் அர்ப்பணிப்புடன் கூடிய தீர்மானம் மிக்கதொருநாள்.
இயேசுவின் மரணத்தில் நம்மையும் பங்குகொள்ள வைத்த நாள்.
நம்முடைய பாவ, சாப, தரித்திர, மரண வல்லமையை முறியடித்த நாள்.
நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்திற்கான நாள்
இதுவே நமது வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும்.
எனவே இது பெரிய வெள்ளி ஆக அழைக்கப்படுகின்றது.
யேசுக்கிறிஸ்து இறந்ததை துக்க நிகழ்வாக பார்த்தாலும் அதனால் மனித குலத்திற்கு ஏற்பட்ட நன்மைகளை கருத்தில் கொண்டே, இன்றைய நாளை ‘புனித வெள்ளி’ என கிறிஸ்தவர்கள் அழைக்கின்றார்கள்.
ஒரு கெட்ட மனிதனுடைய மரணமாக இருந்தாலும் அனுதாபப்படுகின்ற உலகத்திலேயே நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஒரு மனிதனுக்கும் எந்த தீங்கும் செய்யாமல் மனித வாழ்விலும் நன்மை செய்த இயேசுவின் மரண நாளை நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் அழைக்க இதுவே காரணமாக அமைந்துள்ளது.