காதுவலி; நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த நோயாளிக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் ஏற்பட்ட உபாதை காரணமாக அண்மையில் குறித்து நோயாளி உயிரிழந்துள்ளார்.
கந்தகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இதேவேளை, குறித்த தடுப்பூசி ஹொரணை பகுதியில் அமைந்துள்ள மருத்துவ நிறுவனமொன்றில் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது