இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்பிரவரி மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான பொருட்களின் இறக்குமதிக்கு 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு (2023) ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான பொருட்களின் இறக்குமதிக்காக 383.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
மேலும் இந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையானவற்றின் இறக்குமதி செய்வதற்கு 87.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 22.7 சதவீதம் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.