• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதித் தேர்தலுக்கான  ஏற்பாடுகளை செய்தால்  ஆதரவை வழங்க தயார்-சஜித் பிரேமதாச!

பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்! -சஜித் பிரேமதாச

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, தண்டனை சட்டக் கோவையில் முன்வைத்துள்ள திருத்தங்களை மீளப்பெறாவிட்டால் நாட்டில் பாரிய போராட்டகளை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று பதுளையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையை 16 இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கு, தண்டனை சட்டக் கோவையில் அரசாங்கம் திருத்தங்களை முன்வைத்துள்ளது. இவ்வாரம் நாடாளுமன்ற அமர்வின் போது இந்த திருத்தத்தை அரசாங்கம் மீளப்பெறாவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டங்களை நாம் முன்னெடுப்போம்
அரசியலமைப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தொழிற்துறையில் பெண்களின் பங்கழிப்பு 33 சதவீதமாவே. அரசாங்கம் செய்ய முனைகின்ற மிக முட்டாள் தனமான செயல் ஒன்று தொடர்பில் தற்போது வெளிப்படுத்தவுள்ளேன். அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள தண்டனை சட்டக் கோவை திருத்தத்தில்,
குற்றங்களை தடுப்பதற்கன்றி அவற்றை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்கிறது.

பாலியல் உறவுகள் தொடர்பான விருப்பத்தை வெளிப்படுத்தும் வயதை, 16 இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கான திருத்ததை முன்வைத்துள்ளது. அந்த வகையில் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இதற்கான விருப்பத்தைத் தெரிவிக்க முடியும்.
இன்று நாடளாவிய ரீதியில் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், சீண்டல்கள் வானளவு உயர்வடைந்துள்ளன.

இவற்றுக்கு அரசாங்கம் வழங்கும் பதில் யாதெனில், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையைக் குறைப்பதாகும்.
பாலியல் துஷ்பிரயோகங்களை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அது மாத்திரமல்ல. 22 வயதுக்குட்பட்ட ஆணொருவர் ஏதேனும் பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால்,
அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த தண்டனை சட்டக் கோவை திருத்தத்தின் ஊடாக தளர்த்தப்பட்டுள்ளது.

இது சரியா என்று நான் கேட்கின்றேன்? பெண்கள் துஷ்பிரயோகத்தைப் போன்றே ஆண்கள் துஷ்பிரயோகத்துக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் அதற்காக வெவ்வேறாக உறுப்புரைகள் தயாரிக்கப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related

Tags: சஜித் பிரேமதாஸ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதித் தேர்தல் குறித்த விசேட அறிவிப்பு!

Next Post

மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

Related Posts

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?
இலங்கை

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

2026-11-04
111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!
இலங்கை

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

2026-11-04
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!
இலங்கை

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-11-04
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!
அமொிக்கா

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

2026-11-04
வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
இலங்கை

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

2026-11-04
மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!
இலங்கை

மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

2026-11-04
Next Post
நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

மேற்கு வங்காளத்தில் சூறாவளி : ஐவர் மரணம் 500 பேர் காயம்

மேற்கு வங்காளத்தில் சூறாவளி : ஐவர் மரணம் 500 பேர் காயம்

இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார திட்டங்களின் மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடல்

தரை வழிப் பாலத்தின் நிர்மாணப்பணி: இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

0
111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

0
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

0
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

0
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: