சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள 10 வைத்தியசாலைகளில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இலங்கை தேசிய வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, திருகோணமலை போதனா வைத்தியசாலை, கேகாலை பொது வைத்தியசாலை, பொலன்னறுவை பொது வைத்தியசாலை, மன்னார் ஆதார வைத்தியசாலை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகிய 10 வைத்தியசாலைகளில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பள பிரச்சினைக்கு உரியத் தீர்வுக் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று சுகாதார தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்றும் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் 4 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்த நிலையிலேயே இன்று இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், வைத்தியசாலைகளுக்கு வருகைத் தரும் நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.