யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில், தங்கள் நாட்டின் பொம்மலாட்டத்தை சேர்க்க வேண்டும் என பெல்ஜியம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக இருந்த பொம்மலாட்டம், இன்றளவும் பெல்ஜியத்தில் நடைமுறையில் உள்ளதாக அந்நாட்டின் கலை மற்றும் பாரம்பரிய துறை செயலாளர் தெரிவித்தார்.
மேலும், பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகரிலுள்ள சிட்டி ஹால் முன்பாக, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மலர் கம்பள விரிப்பு நிகழ்ச்சியும் உலக அளவில் பிரபலம
ஆகையால் அதனையும் யுனஸ்கோ பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.