கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கட்டுவாப்பிட்டிக்கு விஜயம் செய்தமை
தொடர்பாக இன்று கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 31ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்குச் சென்று
பாதுகாப்பு நிலைமைகளை பார்வையிட்டதுடன் தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களின் நலன்களையும் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு கத்தோலிக்க திருச்சபை இன்று விசனம் வெளியிட்டுள்ளது.