எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது
இதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு குறித்த விசேட ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் பிரதான மார்க்கத்தில் கொழும்பில் இருந்து வழமையான ரயில்போக்குவரத்துக்கு மேலதிகமாக இரண்டு ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் இரவு 7.30 மற்றும் காலை 7.30க்கு குறித்த ரயில்சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது