இந்திய மீனவர்கள் நாட்டின் கடற்பரப்பிற்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருடத்திற்கு 2000 மில்லியன் டொலர் பெறுமதியான மீன்களை பிடிப்பதாக பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 30 வருடங்களில் நாரா நிறுவனம் வடக்கு, கிழக்கு கடற்பரப்புகளில் முறையான கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்திய மீனவர்களால் கொண்டு வரப்படும் தடைசெய்யப்பட்ட உபகரணங்களால் கடலுக்கு அடியில் கூட பெரும் சேதம் ஏற்படுவதாக வடக்கு மற்றும் கிழக்கு விசேட ஆய்வாளர்கள் மற்றும் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.