உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் சேவையில் இருந்து விலகியுள்ள முப்படையினருக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பு அமைச்ச அறிக்கையின் ஊடாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளது
இதன்படி ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 20 ஆம் திகதிவரை குறித்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் முப்படையினரும் விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காதுள்ள பணியாளர்களும் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகிச்செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது
பொதுமன்னிப்பு காலத்தில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் வெளியேறுவதற்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது
கிளிநொச்சி கூட்டுறவுசபைமண்டபத்தில் இன்று முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் வடக்குமாகாண இணைப்பாளர் கனகராஜ் தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார்