வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் , தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அவர் களமிறங்கியுள்ளார்.
வேலுரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மன்சூர் அலிகான் 100 டிகிரிக்கு வெப்பநிலை காணப்படுவதால் அவர் செல்லும் வாகனத்தில் தென்னை ஓலை அமைத்துள்ளார்.
ஓவ்வொருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் மக்களுக்கு சேவை செய்வேன் என வாக்குறுதியளித்துக்கொண்டிருக்க வேலுர் மாவட்டத்தில் காடு, மலைகள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மேலும் , காடு , மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.