”இவ்வாண்டுக்கான முதலாவது முழு சூரிய கிரகணம் இன்று தோன்றும்” என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் வசிப்பவர்களால் மாத்திரமே இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக அவதானிக்க முடியும் எனவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று இரவு 9.12 க்கு சூரியக்கிரகணம் நிகழவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையர்களால் சூரியக்கிரகணத்தை பார்க்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த முழு சூரிய கிரகணம் 2044ஆம் ஆண்டு தோன்றும் என நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.