மன்னாரில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஹட்டனைச் சேர்ந்த 22 வயதான இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த இளைஞன் செலுத்திச் சென்ற சைக்கிள் மீது பின்னால் வந்த பட்டா ரக வாகனமொன்று மோதியதினாலேயே இவ் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் மன்னாரில் உள்ள உணவகமொன்றில் பணியாற்றி வந்துள்ளார் எனவும் அவரது பெயர் சந்திரகுமார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.