இராணுவமும் படைவீரர் சேவை அதிகார சபையும் இணைந்து போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பல துறைகளின் கீழ் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கஜபா படைப்பிரிவின் ரெஜிமென்ட் மையத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
அதன்படி சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி மற்றும் ஏனைய சேவைகள் என பல்வேறு துறைகளில் உள்ள போர்வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சும், ஆயுதப்படையினரும் இணைந்து இதனை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
மேலும் போர்வீரர்களுக்கான காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வகையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.